பாமாலை · Hymn626

ஆ ஸ்வாமி இப்பூலோகத்தின்

O God from heaven look down

Projector

Lyrics

1
ஆ, ஸ்வாமி இப்பூலோகத்தைபரிதபித்துப் பாரும்,குறுகிற்று நல்லோர் சபை,சன்மார்க்கர் லக்கம் தாழும்;தெய்வீக சொல்லைக் கேட்போர் யார்புவியில் விசுவாசிப்பார்மகா அபூர்வமானார்.
2
2, வீண் தோற்றமான போதனைநரர் சூதால் நடக்கும்;நீசமில்லாத தப்பறைஅநேகரால் பிறக்கும்.வெவ்வேறே உபதேசித்துஇன்சொற்களாலே மந்தைக்குக்கேடுண்டாக்குகிறார்கள்.
3
கள்ளத்தன உதடெல்லாம்அறுந்து போவதாக;ஆ, எங்கள் வாய் மேலோங்குமாம்என்றும், யார் எதிராகநிற்பான், யார் எங்கள் ஆண்டவன்என்றும், மகா இடும்புடன்விஷம் இறைக்கிறார்கள்.
4
பாழான மாந்தருடையரட்சிப்புக்காய் வருவோம்,அவர்கள் கெஞ்சி வேண்டினஉதவியைத் தருவோம்;நன்றாக நமது மொழிதீயோரின் மேலே குமுறி,ந்ல்லோரைத் தேற்றும் என்பார்.
5
கர்த்தாவின் சொல் ஏழு முறைகுகையிலே கொட்டுண்டுஉருக்கப்பட்ட வெள்ளியைப்போல் சுத்தமாயிருந்து,எல்லாத் துயரங்களிலும்நல் மாற்றாய் நின்று எங்கேயும்வெளிச்சமாய் விளங்கும்.
626 ஆ ஸ்வாமி இப்பூலோகத்தின் — Tamil Pamalai