பாமாலை · Hymn628
என் மேய்ப்பர் கர்த்தரானவர்
The Lord my faithful Shepherd
1
என் மேய்ப்பர் கர்த்தரானவர்,நன்றாகக் காத்து வந்தார்,அனைத்தையும் எ ரட்சகர்குறைவில்லாமல் தந்தார்.அனைத்திலும் ருசிகரதெய்வீக வார்த்தையாகியநல்மேய்ச்சல் எனக்குண்டு.
2
ஜீவாற்றின் நல் கால்வாய்களைஅவர் எனக்குக் காட்டிஎன் ஆன்மாவதின் தாகத்தைஅன்பால் நன்றாக ஆற்றி,தாம் இயேசு என்னப்பட்டதில்அடியானை நற்பாதையில்நேரே நடத்துவாரே.
3
ஓர் வேழை ஒளியின்றியேநான் மரணப் பயத்தின்இருண்ட பள்ளத்தாக்கிலேநடந்தும், அவதியின்பொல்லாப்புக்குப் பயப்படேன்;நீர் நீட்டுங்கோலைப் பற்றுவேன்,அது வழியைக் காட்டும்.
4
அடியேனுக்கோர் பந்தியைப்பகைஞர்க் கெதிராகவைத்தெண்ணெயால் என் சிரசைமகா கிருபையாகநீ அபிஷேகஞ் செய்கிறீர்;அடியேனை நீர் மறவீர்.என் பாத்திரம் நிரம்பும்.
5
என் ஜீவனுள்ள மட்டுக்கும்தெய்வன்பை நான் உணரும்படிக்கு, என்னை நன்மையும்கிருபையும் தொடரும்.கர்ததாவின் வீட்டில் இங்கேயும்பிற்பாடங்கேயும் என்றைக்கும்நிலைத்துக் கொண்டிருப்பேன்.