பாமாலை · Hymn627
கர்த்தாவே நாங்கள் எங்களில்
We humans are to Spirit'
1
கர்த்தாவே, நாங்கள் எங்களில்மெஞ்ஞானத்துக் காகாதோர்,நீர் அறிவைத் தரீராகில்,அடியார் அறியாதோர்.நீர் அருளின வேதமும்அத்தோடே உமதாவியும்வெளிச்சங் காட்ட வேண்டும்.
2
நீர் இதற்காகக் கிருபைபுரிந் தொத்தாசை பண்ணிமுன் தீர்க்கதரிசிகளைஅனுப்பினதுமன்றி,பிற்பாடு நேச மைந்தனை,சீர்கெட்ட துர் ஆன்மாக்களைபோதிப்பதற்குத் தந்தீர்.
3
இக்கிருபைக்குத் தோத்திரம்,இவர் சொற் கேட்போமாக.திவ்ய வார்த்தையை நாம் தினம்அயரா பக்தியாகத்யானம் செய்தென்றும் யோசித்து,கைக்கொள்ளும்படி உமதுந்ல்லாவியை அளியும்.
4
ஏளனம் செய்வோர் வாய்களைநன்றாய் அடக்கி வையும்;அவர்கள் வேலை எத்தனைநிர்ப்பந்தமாய் முடியும்!ஆ, ஸ்வாமி, உம்முடைய சொல்பலத்த குமுறலைப் போல்மேல் எழும்புவதாக.
5
உள்ளத்தில் அதனுடையவிதை நன்றாய்த் தரித்து,ஒன்றே நூறாய் கனிதரநீர் கிருபை அளித்து,அடியார் அதை என்றைக்கும்நன்னாளிலுந் துன்னாளிலும்விடாப்படிக்குக் காரும்.