பாமாலை · Hymn641

நீர் என் மகிழ்ச்சி கர்த்தரே

O Lord I love Thee from my heart

Projector

Lyrics

1
நீர் என் மகிழ்ச்சி கர்த்தரேமிகுந்த தயவுடனேஎன்னண்டையில் தரியும்;விண்மண்ணிலும் ஏதேதுண்டோஅதும்மை அன்றித் தேற்றுமோ,நீர் தேற்றரவளியும்.என் உயிர் மாண்டு போயினும்நீர் என் கதியுஞ் ஜீவனும்என் கன்மலையுமானவர்,நீர் என்னை மீட்ட ரட்சகர்.ஆ, இயேசுவே தயாளனே என்னைக் காரும்நீர் அன்பாய்த் தேற்றியருளும்.
2
என் தேகம் என் ஆன்மாவையும்எனக்குண்டான யாவையும்நீர் தந்தீர் தயவாக;இதெல்லாம் உமக்கேற்றதாய்,பிறருக் கூழியமுமாய்அனுபவிப்பேனாக;பிசாசின் ஏய்ப்பும் மூர்க்கமும்விலகப் பண்ணீயருளும்.என் துன்பத்தில் நான் உம்மையேபின்பற்றப்பண்ணும் இயேசுவேஆ, இயேசுவே, சாவணுகும் இக்கட்டிலும்நீர் என்னைத் தேற்றிக் கொண்டிரும்.
3
என் ஆன்மாவை நான் உம்மிடம்எடுத்துவரத் தூதரும்அப்போதன்பாய் அனுப்பும;என் தேகம் தன் படுக்கையில்தூங்கட்டும், நீர் வருகையில்நீரே அதை எழுப்பும்;அப்போ நான் உம்மைக் கர்த்தரேமகா மகிழ்ச்சியுடனேகண்ணாரக்கண்டு, என்றைக்கும்பிழைக்கக் கட்டளையிடும்,ஆ, இயேசுவே, இம்மீட்பெல்லாம் உம்மாலேதாம்,புகழ்ச்சி உமக்கே உண்டாம்.
641 நீர் என் மகிழ்ச்சி கர்த்தரே — Tamil Pamalai