பாமாலை · Hymn640
கதிக்கெல்லாம் மேலான
Treasure above all treasures
1
கதிக்கெல்லாம் மேலானகதியாம் இயேசுவே,ஒப்பற்ற அந்தமானஅன்பரே உமக்கேஎன் நெஞ்சை வாஞ்சையாலேஒப்புக்கொடுக்கிறேன்;ஏன் உமது நோவாலேநற்சுகமாகினேன்.
2
நீர் என் முசிப்பை ஆற்றி,மன இடுக்கத்தைமகிழ்ச்சியாக மாற்றி,துக்கிக்கும் மனத்தைத்திடத்துவதற்கானஇம்மானுவேலாமே.நீர் இயேசு, நீர் மெய்யானபரத்தின் மன்னாவே.
3
ஆ, உமது குளிர்ந்தமுகத்தைக் காண்பியும்,என் மனதில் மிகுந்தஅன்பாய் ஒளிவிடும்நீர். என்னண்டை இருந்தால்வாழ்வேன் என் ஜீவனே;அடியேனை நீர் விட்டால்வாழ்வொன்றும் இல்லையே
4
இப்பூமியில் என்னோடுஇரும், என் இயேசுவே,என் மீட்பராம் உம்மோடுநல் மனதுடனேஅனைத்தையும் சகித்துவருகிறேன்; இதோ,என் நோவு உம்மை விட்டுபிரிக்கக் கூடுமோ.
5
இதோ பிழைக்க, சாகஎன் நெஞ்சம் உமக்குக்கொடுத்திருப்பதாக;நீரே என் பூரிப்பு;இங்கும்மை அன்றி வாழும்களிப்பைவிட, நான்உம்மோடடையும் பாடும்இக்கட்டும் மேன்மைதான்.