பாமாலை · Hymn75

உம் அவதாரம் பாரினில்

Projector

Lyrics

1
உம் அவதாரம் பாரினில்கண்ணுற்ற பக்தனாம் யோவான்;கர்த்தா, உம் சாந்த மார்பினில்அன்பாகச் சாயவும் பெற்றான்.
2
சாவுறும் தன்மை தேவரீர்தரித்தும், திவ்விய வாசகன்,அநாதி ஜோதி ரூபம் நீர்,என்றே தெரிந்துகொண்டனன்.
3
கழுகைப் போல் வான் பறந்தேமா ரகசியம் கண்ணோக்கினான்;நீர் திவ்விய வார்த்தையாம் என்றேமெய்யான சாட்சி கூறினான்.
4
உம் அன்பு அவன் உள்ளத்தில்பெருகி பொங்கி வடிந்து,அவன் நல் ஆகமங்களில்இன்னும் பிரகாசிக்கின்றது.
5
சீர் கன்னி மைந்தா, இயேசுவே,பூலோக ஜோதியான நீர்,பிதா, நல்லாவியோடுமேஎன்றென்றும் துதி பெறுவீர்
75 உம் அவதாரம் பாரினில் — Tamil Pamalai