பாமாலை · Hymn78

ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்

Nun lasst uns und treten

Projector

Lyrics

1
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்,அடியேனைக் காத்தீரே;மீண்டும் என்னை உமக்கேற்றசேவை செய்யக் கொள்வீரே;என் இதயம் மனம் செயல்யாவும் உம்மைத் துதிக்கும்;ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்!அடியேனை ஆட்கொள்ளும்.
2
இவ்வுலக வாழ்நாள் எல்லாம்நான் உமக்காய் வாழவும்,அன்பு, தியாகம், அருள், பக்திஅனைத்தும் பெற்றோங்கவும்,பாவ அழுக்கெல்லாம் நீக்கிதூய பாதை செல்லவும்,ஆண்டவா, உம் அருள் தாரும்,அடியேனை ஆட்கொள்ளும்.
3
வியாதி, துக்கம், தொல்லை வந்தால்உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்;உம் ப்ரசன்னம் எனக்கின்பம்சாவுக்கும் நான் அஞ்சிடேன்;துன்பத்தில் என் நண்பர் நீரேஇன்பம் ஈபவர் நீரே;ஆண்டவா, நீர்தாம் என் தஞ்சம்,அடியேனை ஆட்கொள்ளும்.
4
மூவராம் திரியேகர்க்கென்றும்,மாட்சி மேன்மை மகிமை;விண்ணில் தூதர் தூயர் கூட்டம்அவர் நாமம் துதிக்கும்;மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும்அவர் பாதம் போற்றவும்,ஆண்டவா, உம் அருள் தாரும்,அடியாரை ஆட்கொள்ளும்.
78 ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் — Tamil Pamalai