பாமாலை · Hymn102
இரத்தம் காயம் குத்தும்
O sacred Head sore wounded
1
இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன்.
2
நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன்.
3
நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர் தேற்றரவளிக்கபேரின்பமாயிற்றே.
4
என் மூச்சொடுங்கும் அந்தகடை இக்கட்டிலும்நீர் எனக்காய் இறந்தரூபாகக் காண்பியும்;அப்போ நான் உம்மைப் பார்த்துகண்ணோக்கி நெஞ்சிலேஅணைத்துக்கொண்டு சாய்ந்து,தூங்குவேன், இயேசுவே.