பாமாலை · Hymn172

சபையின் அஸ்திபாரம்

The Church's one foundation

Projector

Lyrics

1
சபையின் அஸ்திபாரம்நம் மீட்பர் கிறிஸ்துவேசபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையேதம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்,தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார்.
2
எத்தேசத்தார் சேர்ந்தாலும்சபைஒன்றே ஒன்றாம்ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்விய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும்.
3
புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப்படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,”எம்மட்டும்” என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம்.
4
மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும்.
5
என்றாலும், கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்.இப்பாக்கிய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண் லோகத்தில் உம்மோடுதங்கக் கடாட்சியும்.
172 சபையின் அஸ்திபாரம் — Tamil Pamalai