பாமாலை · Hymn103

என் அருள் நாதா

When I survey the wondrous cross

Projector

Lyrics

1
என் அருள் நாதா இயேசுவேசிலுவைக் காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஷ்டமேஎன்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்.
2
என் மீட்பர் சிலுவை அல்லால்வேறெதை நான் பாராட்டுவேன்?சிற்றின்பம் யாவும் அதினால்தகாததென்று தள்ளுவேன்
3
கை, தலை, காலிலும், இதோபேரன்பும் துன்பும் கலந்தேபாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?முள்முடியும் ஒப்பற்றதே.
4
சராசரங்கள் அனைத்தும்அவ்வன்புக்கு எம்மாத்திரம்!என் ஜீவன் சுகம் செல்வமும்என் நேசருக்குப் பாத்தியம்.
5
மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்சம்பாதித்தீந்த இயேசுவே,உமக்கு என்றும் தாசரால்மா ஸ்தோத்திரம் உண்டாகவே.
103 என் அருள் நாதா — Tamil Pamalai