பாமாலை · Hymn108

பாவ நாசர் பட்ட காயம்

Sweet the moments rich in blessing

Projector

Lyrics

1
பாவ நாசர் பட்ட காயம்நோக்கி தியானம் செய்வதுஜீவன், சுகம், நற்சகாயம்,ஆறுதலும் உள்ளது.
2
ரத்த வெள்ளம் பாய்ந்ததாலேஅன்பின் வெள்ளம் ஆயிற்று;தெய்வ நேசம் அதினாலேமானிடர்க்குத் தோன்றிற்று.
3
ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்தஞ்சம் என்று பற்றினேன்;அவர் திவ்விய நேச முகம்அருள் வீசக் காண்கிறேன்.
4
பாசத்தால் என் நெஞ்சம் பொங்கிதுக்கத்தால் கலங்குவேன்;அவர் சாவால் துக்கம் மாறிசாகா ஜீவன் அடைவேன்.
5
சிலுவையை நோக்கி நிற்க,உமதருள் உணர்வேன்;தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட,சமாதானம் பெறுவேன்.
6
அவர் சிலுவை அடியில்நிற்பதே மா பாக்கியம்;சோர்ந்த திரு முகத்தினில்காண்பேன் திவ்விய உருக்கம்.
7
உம்மை நான் கண்ணாரக் காணவிண்ணில் சேரும் அளவும்,உம்மை ஓயா தியானம் செய்யஎன்னை ஏவியருளும்.
108 பாவ நாசர் பட்ட காயம் — Tamil Pamalai