பாமாலை · Hymn159
தந்தையின் பிரகாசமாகி
Life and strength of all Thy servants
1
தந்தையின் பிரகாசமாகிபக்தர் ஜீவனானோரேவிண்ணோரோடு மண்ணோர் சேர்ந்துஉம்மைத் துதி செய்வாரே.
2
கோடாகோடித் தூதர் கூட்டம்யுத்த வீர சேனைதான்வெற்றிக் குருசை கையில் தாங்கிதூய மிகாவேல் நிற்பான்.
3
பட்டயத்தை ஓங்கி துரோகசேனை விண்ணின்றோட்டுவான்தெய்வ சத்துவத்தால் வலுசர்ப்பத்தையும் மிதிப்பான்.
4
தீய சேனை அஞ்சி ஓடநாங்கள் மோட்சம் சேரவும்எங்கள் போரில் விண்ணோர் துணைகிறிஸ்துவே கடாட்சியும்.
5
மா பிதாவாம் நித்திய ஜீவாமாண்டுயிர்த்த மைந்தனேதூய ஆவியே எந்நாளும்ஸ்தோத்திரம் என்றும் உமக்கே.