பாமாலை · Hymn153
ஓர் முறை விட்டு
Forsaken once and thrice denied
1
ஓர் முறை விட்டு மும்முறைசீமோன் மறுத்தும் ஆண்டவர்,"என்னிலே அன்புண்டோ"? என்றேஉயர்த்தபின் கேட்டனர்
2
விஸ்வாசமின்றிக் கர்த்தரைபன்முறை நாமும் மறுத்தோம்;பயத்தினால் பலமுறைநம் நேசரை விட்டோம்.
3
சீமோனோ சேவல் கூவுங்கால்மனம் கசந்து அழுதான்;பாறை போல் நின்று பாசத்தால்கர்த்தாவைச் சேவித்தான்.
4
அவன் போல் அச்சங் கொள்ளினும்,நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்;பாவத்தால் வெட்கம் அடைந்தும்கண்ணீர் சொரிந்திலோம்.
5
நாங்களும் உம்மை விட்டுமேபன்முறை மறுதலித்தும்,நீர் எம்மைப் பார்த்து, இயேசுவே,நெஞ்சுருகச் செய்யும்.
6
இடறும் வேளை தாங்கிடும்உம்மைச் சேவிக்கும் கைகளும்,உம்மை நேசிக்கும் நெஞ்சமும்அடியார்க்கருளும்.