பாமாலை · Hymn156
இவ்வுயர் மலை மீதினில்
O Master it is good to be
1
இவ்வுயர் மலை மீதினில்எம் நாதா, உந்தன் பாதத்தில்எம் பாவக் கண்ணால் காண்கிறோம்உம தாசர் பூர்வ பக்தராம்;சீனாய் மலை மேல் கற்பனைவானோரால் பெற்ற மோசேயை;தீ, காற்று, கம்பம் கன்டோனைமா மேன்மை சத்தம் கேட்டோனை.
2
இவ்வுயர் மலை மீதினில்எம் நாதர் சீஷர் மூவரே;கற்பாறை போன்ற பேதுருநிற்பான் எப்பாவம் எதிர்த்து;இடி முழக்க மக்களாம்;கடிந்த பேச்சு யாக்கோபாம்;" அன்பே கடவுள்" போதிப்பான்உன்னத ஞானியாம் யோவான்
3
இவ்வுயர் மலை மீதிலும்உயர்ந்து உள்ளம் பொங்கிடும்;பரமன் ஜோதி தோன்றிடும்பகலோன் ஜோதி மாய்த்திடும்;மா தூய ஆடை வெண்மையே,ஆ மாந்தர் காணா விந்தையே;நாம் மேலும் மேலும் ஏறியேநம் நாதர் ரூபம் காண்போமே
4
இவ்வுயர் மலை மீதினில்எம் நாதர் தூய பாதத்தில்மா இருள் மேகம் மூடினும்மா ஜோதி பார்வை வாட்டினும்காண்போமே தெய்வ மைந்தனைகேட்போமே தெய்வ வார்த்தையை"இவர் என் நேச மைந்தனார்;இவர்க்கு செவி கொடுப்பீர்."