பாமாலை · Hymn152
கர்த்தர் சமீபமாம்
On Jordan's banks the Baptist's cry
1
கர்த்தர் சமீபமாம் என்றேயோர்தான் நதியின் அருகே,முன் தூதன் யோவான் கூறிடும்நற்செய்தி கேட்க விழியும்.
2
விருந்தும் போன்றே நாதனார்நம் நெஞ்சில் வந்து தங்குவார்அவர்க்கு வழி ஆகவும்அகத்தைச் சுத்தம் பண்ணுவோம்.
3
நாதா, நீர் எங்கள் தஞ்சமும்,ரட்சிப்பும், ஜீவ கிரீடமும்உம் அருள் அற்ற யாவரும்உலர்வார் புஷ்பம் போலவும்.
4
நோய் கொண்டோர் சொஸ்தமாகவும்வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும்பூலோகம் சீர் அடையவும்எழும்பி நீர் பிரகாசியும்.
5
உமக்கு சாட்சி கூறியேவழி ஆயத்தமாகவே,யோவான் ஸ்நானன்போல் நாங்களும்உம் அருள் பெறச் செய்திடும்.