பாமாலை · Hymn158

இதோ உன் நாதர்

Behold the Master passeth by

Projector

Lyrics

1
இதோ, உன் நாதர் செல்கின்றார்;உன்னை அழைக்கும் அன்பைப் பார்!வீண் லோகம் விட்டென்பின் செல்வாய்என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய்
2
துன்பத்தில் உழல்வோனே நீமோட்சத்தின் வாழ்வைக் கவனிபற்றாசை நீக்கி விண்ணைப் பார்இதோ, உன் நாதர் செல்கின்றார்!
3
அவ்வழைப்பை இப்பக்தன்தான்கேட்டே, செல்வத்தை வெறுத்தான்சீர் இயேசுவின் சிலுவைக்காய்எல்லாம் எண்ணினான் நஷ்டமாய்.
4
நாடோறும் ‘என்பின் செல்’ என்னும்அழைப்பு அவன் நெஞ்சிலும்,உற்சாகத்தோடுழைக்கவேதிட சித்தம் உண்டாக்கிற்றே.
5
நாடோறும் நம்மை நாதர்தாம்அழைத்தும் தாமதம் ஏனாம்?ஏன் மோட்ச வாழ்வைத் தள்ளுவோம்?ஏன் லோகமாயை நாடுவோம்?
6
மத்தேயு பக்தன் போலவும்எல்லாம் வெறுத்து நாங்களும்நல் மனதோடு உம்மையேபின்பற்ற ஏவும், கர்த்தரே.
158 இதோ உன் நாதர் — Tamil Pamalai