பாமாலை · Hymn169

வெள்ளை அங்கி தரித்து

Not Available

Projector

Lyrics

1
வெள்ளை அங்கி தரித்துசுடர் ஒளியுள்ளோர் ஆர்?ஸ்வாமியை ஆராதித்துபூரிப்போர் களிப்போர் ஆர்?சிலுவையை எடுத்து,இயேசுவின் நிமித்தமேயுத்தம் பண்ணிப் பொறுத்துநின்றோர் இவர்கள்தானே.
2
மா துன்பத்திலிருந்துவந்து, விசுவாசத்தால்தெய்வ நீதி அணிந்துசுத்தமானார்; ஆதலால்ஓய்வில்லாமல் கர்த்தரைகிட்டி நின்று சேவிப்பார்கர்த்தர் சுத்தவான்களைசேர்த்து ஆசீர்வதிப்பார்.
3
அவர் ஜெயம் கொண்டோராய்இனி சோதிக்கப்படார்தீமை நீங்கித் தூயோராய்பசி தாகம் அறியார்மத்தியான உஷ்டணம்இனி படமாட்டாதே;அவர்கள் மெய்ப் பாக்கியம்வளர்ந்தோங்கும் நித்தமே.
4
தெய்வ ஆட்டுக்குட்டியும்அவர்களைப் போஷிப்பார்ஜீவ தருக் கனியும்ஜீவ நீரும் அளிப்பார்துக்கம் துன்பம் ஒழித்துகுறை யாவும் நீக்குவார்கண்ணீரையும் துடைத்துஅன்பினால் நிரப்புவார்.
169B வெள்ளை அங்கி தரித்து · St. George — Tamil Pamalai