பாமாலை · Hymn189
என் மீட்பர் இயேசுகிறிஸ்துவே
Not Available
1
என் மீட்பர் இயேசு கிறிஸ்துவேஉம் பாதத்தண்டை நிற்கிறேன்திக்கற்ற பிள்ளை கெஞ்சவேதள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன்.
2
என் கிரியைகள் எம்மாத்திரம்?பிரயாசை எல்லாம் விருதாஉம்மாலேயே மெய்ப் பாக்கியம்உண்டாகும் நேச ரட்சகா.
3
உந்தன் சரீரம் ரத்தமும்மெய்ப் பொருள் என்று அறிவேன்உட்கொண்டன்பாய் அருந்தவும்நான் பரவசமாகுவேன்.
4
மாசற்ற திரு ரத்தத்தைகொண்டென்னைச் சுத்திகரியும்மா திவ்விய ஜீவ அப்பத்தைஎன் நெஞ்சத்தில் தந்தருளும்.
5
என் நாதா உம் சரீரமேமேலான திவ்விய போஜனம்மாசற்ற உந்தன் ரத்தமேமெய்யான பான பாக்கியம்.