பாமாலை · Hymn255
நான் தேவரீரை கர்த்தரே
O Lord I sing with mouth (Ich singe dir mit Herz)
1
நான் தேவரீரை, கர்த்தரேதுதிப்பேன் அடியேன்,எல்லாரின் முன்னும் உம்மையேஅறிக்கை பண்ணுவேன்.
2
ஆ எந்த மா பாக்யங்களும்உம்மால்தான் வருமே;உண்டான எந்த நன்மைக்கும்ஊற்றானவர் நீரே.
3
உண்டான நன்மை யாவையும்நீ தந்தீர், கர்த்தரே;உம்மாலொழிய எதுவும்உண்டாகக் கூடாதே.
4
நீர் வானத்தை உண்டாக்கினகர்த்தா, புவிக்கு நீர்கனிகளைக் கொடுக்கிறபலத்தையும் தந்தீர்.
5
குளிர்ச்சிக்கு மறைவையும்ஈவீர்; எங்களுக்குபுசிக்கிறதற் கப்பமும்உம்மால் உண்டானது.
6
இக்கட்டில் நாங்கள் கூப்பிட்டால்,நீர் கேட்டிரங்குவீர்,எங்களை மாதயவினால்ரட்சித்துத் தாங்குவீர்.