பாமாலை · Hymn32
நாம் நித்திரை செய்து
New every morning is the love
1
நாம் நித்திரை செய்து விழித்தோம்நற்சுகம் பலம் அடைந்தோம்நாள்தோறும் தெய்வ அன்பையேஉணர்ந்து ஸ்துதி செய்வோமே.
2
தீங்கை விலக்கிப் பாவத்தைமன்னித்து, மோட்ச நம்பிக்கைமென்மேலும் ஓங்க நாதனார்கடாட்சம் செய்து காக்கிறார்.
3
அன்றன்று வரும் வேலையைநாம் செய்கின்ற பணிவிடைஎன்றெண்ணியே, ஒவ்வொன்றையும்படைப்போம் பலியாகவும்.
4
நம்மை வெறுத்து, கர்த்தரின்சமீபம் சேர விரும்பின்,அன்றாடக கடமையும்ஓர் ஏதுவாக விளங்கும்.
5
ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்,கர்த்தாவே, பலம் ஈந்திடும்;உம்மண்டை நாங்கள் வாழவும்தகுந்தோர் ஆக்கியருளும்.