பாமாலை · Hymn327

வாழ்நாளில் யாது

Through all the changing scenes of life

Projector

Lyrics

1
வாழ்நாளில் யாது நேரிட்டும்,எவ்வின்ப துன்பத்தில்நான் போற்றுவேன் என் ஸ்வாமியைசிந்தித்து ஆன்மாவில்.
2
சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம்அவர் மா நாமமேஎன் தீங்கில் கேட்டார் வேண்டலேதந்தார் சகாயமே.
3
சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமேவிண் சேனை காத்திடும்கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும்சகாயம் கிட்டிடும்.
4
அவர் மா அன்பை ருசிப்பின்பக்தர் நீர் காண்பீராம்பக்தரே பக்தர் மட்டுமேமெய்ப் பேறு பெற்றோராம்.
5
கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்அச்சம் வேறில்லையேகளித்தவரைச் சேவிப்பின்ஈவார் உம் தேவையே.
6
நாம் போற்றும் ஸ்வாமியாம் பிதாகுமாரன் ஆவிக்கேஆதியில் போலும் எப்போதும்மகிமை யாவுமே.
327A வாழ்நாளில் யாது · irish — Tamil Pamalai