பாமாலை · Hymn350
பிளவுண்ட மலையே
Rock of ages cleft for me
1
பிளவுண்ட மலையேபுகலிடம் ஈயுமேபக்கம் பட்ட காயமும்பாய்ந்த செந்நீர் வெள்ளமும்பாவதோஷம் யாவையும்நீக்கும்படி அருளும்.
2
எந்தக் கிரியை செய்துமேஉந்தன் நீதி கிட்டாதேகண்ணீர் நித்தம் சொரிந்தும்கஷ்ட தவம் புரிந்தும்பாவம் நீங்க மாட்டாதேநீரே மீட்பர் இயேசுவே
3
யாதுமற்ற ஏழை நான்நாதியற்ற நீசன் தான்உம் சிலுவை தஞ்சமேஉந்தன் நீதி ஆடையேதூய ஊற்றை அண்டினேன்தூய்மையாக்கேல் மாளுவேன்
4
நிழல் போன்ற வாழ்விலேகண்ணை மூடும் சாவிலேகண்ணுக்கெட்டா லோகத்தில்நடுத்தீர்வை தினத்தில்பிளவுண்ட மலையேபுகலிடம் ஈயுமே