பாமாலை · Hymn358
மெய்ச் சமாதானமா
Peace perfect peace
1
மெய்ச் சமாதானமா துர் உலகில்?ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்
2
மெய்ச் சமாதானமா பல் தொல்லையில்?ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில்.
3
மெய்ச் சமாதானமா சூழ் துக்கத்தில்?ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்.
4
மெய்ச் சமாதானமா உற்றார் நீங்கில்?ஆம், இயேசு கரம் நம்மைக் காக்கையில்.
5
மெய்ச் சமாதானமா சிற்றறிவில்?ஆம், இயேசு ராஜன் என்று அறிகில்.
6
மெய்ச் சமாதானமா சா நிழலில்?ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்.
7
பூலோக துன்பம் ஒழிந்த பின்னர்.இயேசு மெய்ச் சமாதானம் அருள்வர்.