பாமாலை · Hymn370

எந்தன் ஆத்ம நேசரே

Jesus Lover of my soul

Projector

Lyrics

1
எந்தன் ஆத்ம நேசரேவெள்ளம் போன்ற துன்பத்தில்தாசன் திக்கில்லாமலேதடுமாறிப் போகையில்தஞ்சம் தந்து இயேசுவேதிவ்விய மார்பில் காருமேன்அப்பால் கரையேற்றியேமோட்ச வீட்டில் சேருமேன்.
2
வல்ல தேவரீர் அல்லால்வேறே தஞ்சம் அறியேன்கைவிடாமல் நேசத்தால்ஆற்றித் தேற்றித் தாங்குமேன்நீரே எந்தன் நம்பிக்கைநீர் சகாயம் செய்குவீர்ஏதுமற்ற ஏழையைசெட்டையாலே மூடுவீர்
3
குறை யாவும் நீக்கிடநாதா நீர் சம்பூரணர்திக்கற்றோரைத் தாங்கிடநீரே மா தயாபரர்நான் அசுத்த பாவிதான்நீரோ தூயர் தூயரேநான் அநீதி கேடுள்ளான்நீர் நிறைந்த நித்தியரே
4
பாவம் யாவும் மன்னிக்கஆரருள் அமைந்த நீர்என்னைச் சுத்திகரிக்கஅருள் பாயச் செய்குவீர்ஜீவ ஊற்றாம் இயேசுவேஎந்தன் தாகம் தீருமேன்ஸ்வாமி என்றும் என்னிலேநீர் சுரந்து ஊறுமேன்.
370A எந்தன் ஆத்ம நேசரே · Hollingside — Tamil Pamalai