பாமாலை · Hymn547

பிதாவே ஞானம் அன்பினால்

O Father all creating whose wisdon

Projector

Lyrics

1
பிதாவே, ஞானம் அன்பினால்அனைத்தையும் படைத்தீர்;ஏதேனிலே விவாகத்தால்ஆண் பெண்ணையும் இணைத்தீர்;அப்பூர்வ ஆசீர்வாதத்தை,இவ்வாழ்க்கையின் நல்லின்பத்தைஇவர்களுக்கும் ஈயும்.
2
கானா ஊர் விருந்தாளியே,இங்கே ப்ரசன்னமாகும்;உந்தன் சம்பூரணத்தாலேகுறைவை நிறைவாக்கும்;இவர்கள் இக இன்பமேபரத்தின் பாக்யமாகவேநீர் மாறும்படிச் செய்யும்.
3
மா தூய ஆவி தேவரீர்இவர்கள் மேலே ஊதும்;உம தூய்மை அன்பினாலும் நீர்இவர்களைத் தற்காரும்;எப்பாவத்துக்கும் நீங்கியே,ஒரே சரீரம் போலவேஇவர்கள் வாழச் செய்யும்.
4
த்ரியேகா நீர் கட்டாவிடில்பிரயாசம் வீணே ஆகும்;நீர் ஆசீர்வதிக்காவிடில்,இன்பமும் துன்பமாகும்;உம்மால் இணைக்கப் பட்டோரை,குன்றாத நேசமுள்ளோரையார் தான் பிரிக்கக் கூடும்?
547 பிதாவே ஞானம் அன்பினால் — Tamil Pamalai