பாமாலை · Hymn575

மா மேன்மை பெற்ற வேதமே

Thou best of books

Projector

Lyrics

1
மா மேன்மை பெற்ற வேதமேஉன் ஜோதி வீசுதேஉன் வாக்கைக் கேப்போர்சிந்திப்போர்மா இன்பம் காண்பாரேஓர் ஏற்ற வார்த்தைசொல்வாயே!எத்தன்மையுள்ளோர்க்கும்ஆ! எல்லையில்லாச் செல்வமும்உன்னாலே கிடைக்கும்
2
மா கோபம் தப்ப ஓடிடநீ புத்தி சொல்கிறாய்குருசெடுத்துப் பின் செல்வோர்க்குப்பேர் வாக்குக் கொடுத்தாய்ஜீவாற்றில் பானம் பண்ணலாம்மெய் வாஞ்சையுள்ளோரேமா சுத்தர் பாக்கியவான்களாம்என்றருள்கின்றாயே
3
உன் கண்டிப்பும் எச்சரிப்பும்மா நன்மையானதேமெய் வாஞ்சை ஜெபத்தோடதைநான் ஏற்றுக் கொள்வேனேஆ! மேன்மைப் பெற்ற வேதமேநிர்ப்பாக்கியாராவோமேஉன் ஆறுதல் சந்தோஷமும்மெய் வாழ்வும் இன்றியே
575 மா மேன்மை பெற்ற வேதமே — Tamil Pamalai