பாமாலை · Hymn66

நள்ளிரவில் மா

It came upon the midnight clear

Projector

Lyrics

1
நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே.
2
இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தேதுன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தேபாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே.
3
விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்ஈராயிரம் ஆண்டும்,மண்ணோரின் பாவம் பகை போர்பூலோகத்தை இன்றும்வருந்தும்; மாந்தர் கோஷ்டத்தில்கேளார் அக்கானமேபோர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்விண் தூதர் கீதமே.
4
பார் வாழ்க்கையின் மா பாரத்தால்நைந்து தவிப்போரே,சோர்ந்தே போய்ப் பாதை நகர்ந்துதள்ளாடிடுவோரே,நோக்கும், இதோ உதித்ததேமா நற் பொற் காலமேநோவை மறந்து கேட்டிடும்விண் தூதர் கீதமே.
5
தோன்றிடும் இதோ சீக்கிரம்பேரின்ப காலமேசான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும்உரைத்த காலமே!போர் ஓய்ந்து பூமி செழிக்கும்பூர்வ மாண்போடுமேபாரெங்கும் பரந்தொலிக்கும்விண் தூதர் கீதமே.
66A நள்ளிரவில் மா · Carol — Tamil Pamalai