பாமாலை · Hymn98

இதோ மரத்தில் சாக

See world thy life (O welt sieh hier)

Projector

Lyrics

1
இதோ, மரத்தில் சாகஉன் ஜீவன் உனக்காகபலியாம், லோகமே;வாதை அடி பொல்லாப்பைசகிக்கும் மா நாதனைகண்ணோக்குங்கள், மாந்தர்களே.
2
ஆர் உம்மைப் பட்சமானகர்த்தா, இத்தன்மையானவதைப்பாய் வாதித்தான்?நீர் பாவம் செய்திலரே,பொல்லாப்பை அறியீரே;ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்?
3
ஆ! இதைச் செய்தேன் நானும்என் அக்கிரமங்கள் தானும்,கடற்கரை மணல்அத்தன்மையாய்க் குவிந்தஎன் பாதகங்கள் இந்தவதைப்புக் காதிமூலங்கள்.
4
நீரோ என்மேல் உண்டானஅழுத்தும் பாரமானசுமை சுமக்கிறீரே;ஆசீர்வதிக்க நீரேபோய்ச் சாபமாகிறீரே;நான் தப்ப நீர் படுகிறீர்.
5
கர்த்தாவே, நீர் பகைக்கும்பொல்லாப்பை என்றென்றைக்கும்வெறுத்தரோசிப்பேன்;என் இச்சையை நாள்தோறும்ஆகாத சிந்தையோடும்நான் சிலுவையில் அறைவேன்.
6
ஆ, உமது ஜெபமும்அவஸ்தையும் தவமும்கண்ணீருங் கிலேசமும்,நான் செத்தால் பரலோகசந்தோஷத்துக்குப் போகவழித் துணைக்குதவவும்.
98A இதோ மரத்தில் சாக · Not Available — Tamil Pamalai