பாமாலை · Hymn105
என்னுடைய சாவின் சாவே
Jesu, Meines Lebens Leben
1
என்னுடைய சாவின் சாவே,என் உயிரின் ஜீவனே,என்னை மீட்க நீர் கர்த்தாவே,தெய்வ கோபத் தீயிலேபாய்ந்து, மா அவஸ்தையாகபட்ட கன வாதைக்காகஉமக்காயிரம் தரம்இயேசுவே சங்கீர்த்தனம்
2
நான் சுகிக்க நீர் இக்கட்டுதுன்பம் வாதை நோவிடர்குட்டறை, பொல்லாப்பும் பட்டுவாரடியும் பட்டவர்ஆசீர்வாதமே உண்டாகசாபம்நீர் எனக்காக;உமக்காயிரம் தரம்இயேசுவே சங்கீர்த்தனம்
3
என் அநியாயத்தைக் கழித்துஎன்னை மீட்டு விடவேநோவு யாவும் உத்தரித்து,நல்ல மனதுடனேரத்தம் சிந்தி, மா நிர்ப்பந்தசிலுவையிலே இறந்தஉமக்காயிரம் தரம்இயேசுவே சங்கீர்த்தனம்
4
உம்முடைய பணிவாலேஎன் இடும்பின் ஆக்கினைஉம்முடைய நிந்தையாலேஎன்னுடைய சிறுமைதீரும்; உம்முடைய சாவுசாவில் எனக்கான தாவுஉமக்காயிரம் தரம்இயேசுவே சங்கீர்த்தனம்
5
இயேசுவே நீர் சாந்தமாகஉள்ளேயும் புறம்பேயும்ஜீவன் போகுமளவாகபட்ட பாடனைத்துக்கும்என்ன சொல்வேன்! எனக்காகபட்டீரென்று தாழ்மையாகஉம்மை நான் வணங்குவேன்என்றென்றைக்கும் போற்றுவேன்