பாமாலை · Hymn175

ஆதியில் இருளை

Thou Whose Almighty word

Projector

Lyrics

1
ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி, கர்த்தாவே,பிரகாசிப்பீர்.
2
நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்,கண்ணற்றோர் காணவும்,மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர்.
3
சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல் பறந்தே,பார் இருள் நீக்கியேபிரகாசிப்பீர்.
4
ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர்.
175 ஆதியில் இருளை — Tamil Pamalai