பாமாலை · Hymn210

திருச்சபை காத்திருக்க

Lord her watch Thy Church is keeping

Projector

Lyrics

1
திருச்சபை காத்திருக்கஎந்நாள், நாதா, வருவீர்?எந்நாள் துக்க ரா முடியபகல் விடியச் செய்வீர்?நெல் விளைந்து வாடிப்போகஅறுப்போரும் குறைந்தார்;சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ளகிறிஸ்து வீணாயோ மாண்டார்?
2
சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்திகோடாகோடி கேளாரேயார்தான் கேட்பார் சொல்வார் இன்றி?நாதா, வார்த்தை ஈயுமே;வார்த்தை ஈயும் சுவிசேஷதொனி எங்கும் ஒலித்தும்,எல்லாத் தேசத்தாரும் திவ்வியமீட்பைக் கேட்க செய்திடும்
3
நீர் தெரிந்தோர் ஈறுகாலம்ஒன்றாய் சேர்க்கப்படுவார்;சாத்தான் கட்டப்பட்டுப் பாவம்மாய, கிறிஸ்து ஆளுவார்;பசி தாகம் நோவு சாவும்கண்ணீர் யாவும் நீங்கவேதிருச்சபை காத்திருக்கும்இயேசு ஸ்வாமி, வாருமே.
210A திருச்சபை காத்திருக்க · Everton — Tamil Pamalai