பாமாலை · Hymn219

மெய் அன்பரே

O Thou Who gavest power to Love

Projector

Lyrics

1
மெய் அன்பரே உம் மா அன்பைஉய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர்;பூலோக பாக்கியத்தால் எம்மைமேலாக சிந்தையாக்குவீர்
2
உம் ஆவியால் எம் உள்ளத்தில்உந்தன் மா நோக்கம் காட்டுவீர்;உம் நோக்கம் பூர்த்தியாகிடஎம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர்
3
மெய் அன்பால் அன்பர் ஸ்வாமியில்எய்துவர் உன்னத நிலை;பேரின்பப் பேறு ஆன்மாவில்பாரினில் மேலாம் வாழ்க்கையை
4
தம் உள்ளம் ஒன்றை இணைக்கும்தம்பதிகள் இவருக்கேநித்தம் புத்தன்பு இன்பமும்சித்தமே வைத்து ஈயுமே
5
நற்குணம் யாவும் இவரில்நன்கே அமைந்து தீமையைஅகற்றி பெற நெஞ்சத்தில்அழகு வன்மை தூய்மையை
6
ஏகமாய் ஜீவ பாதையில்சுகமாய் வாழ உம்மிலே;தம் அன்பை ஊன்றி வாழ்க்கையில்எத்துன்பம் கஷ்டம் மேற்கொண்டே.
219 மெய் அன்பரே — Tamil Pamalai