பாமாலை · Hymn250

யாரிலும் மேலான அன்பர்

One there is above all others

Projector

Lyrics

1
யாரிலும் மேலான அன்பர் மா நேசரே;தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர் மா நேசரே!மற்ற நேசர் விட்டுப் போவார்,நேசித்தாலும் கோபம் கொள்வார்;இயேசுவோ என்றென்றும் மா நேசரே!
2
என்னைத் தேடி சுத்தஞ் செய்தார் மா நேசரே!பற்றிக் கொண்ட என்னை விடார் மா நேசரே!இன்றும் என்றும் பாதுகாப்பார்,பற்றினோரை மீட்டுக் கொள்வார்,துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே!
3
நெஞ்சமே, நீ தியானம் பண்ணு மா நேசரை;என்றுமே விடாமல் எண்ணு மா நேசரை;எந்தத் துன்பம் வந்தும்; நில்லு;நேரே மோட்ச பாதை செல்லு,இயேசுவாலே யாவும் வெல்லு, மா நேசரே!
4
என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம், மா நேசரே!சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம் மா நேசரே!கொண்ட நோக்கம் சித்தி செய்வார்,நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்,மோட்ச நன்மை யாவும் ஈவார், மா நேசரே!
250D யாரிலும் மேலான அன்பர் · Gounod — Tamil Pamalai