பாமாலை · Hymn26
நல் மீட்பரே இந்நேரத்தில்
Sweet Saviour Bless us
WorshipஆராதனைMeter8.8.8.8.8.8TuneLordsworthOrgan recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
நல் மீட்பரே இந்நேரத்தில்வந்தாசீர்வாதம் கூறுமேன்உம் வார்த்தை கேட்டோர் மனதில்பேரன்பின் அனல் மூட்டுமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும்.
2
இன்றெங்கள் செய்கை யாவையும்தயாபரா, நீர் நோக்கினீர்எல்லாரின் பாவம் தவறும்மா அற்பச் சீரும் அறிந்தீர்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே பிரகாசியும்.
3
எப்பாவத் தீங்கிலிருந்தும்விமோசனத்தைத் தாருமேன்உள்ளான சமாதானமும்சுத்தாங்கமும் உண்டாக்குமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும்.
4
சந்தோஷம் பயபக்தியும்நீர் நிறைவாக ஈயுமேன்உமக்கொப்பாக ஆசிக்கும்தூய்மையாம் உள்ளம் தாருமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும்
5
தரித்திரம் துன்பும் பாவத்தால்இக்கட்டடைந்த யாரையும்கண்ணோக்கும் மா கிருபையால்நீர் மீட்பர், நீர் சமஸ்தமும்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake