பாமாலை · Hymn276

சுத்த ஆவி என்னில்

Gracious Spirit, dwell with me

Projector

Lyrics

1
சுத்த ஆவி, என்னில் தங்கும்,நானும் சுத்தன் ஆகவே;பாவ அழுக்கெல்லாம் நீக்கும்;உம் ஆலயமாகவேஎன்னை நீர் சிங்காரியும்,வாசம் பண்ணும் நித்தமும்.
2
சத்திய ஆவி, என்னில் தங்கும்,நானும் சத்தியன் ஆகவே!தெய்வ பக்தி என்னில் முற்றும்வளர்ந்தேறச் செய்யுமே;நீர் என்னில் பிரவேசியும்,ஆண்டுகொள்ளும் நித்தமும்.
3
நேச ஆவி, என்னில் தங்கும்,நானும் நேசன் ஆகவே!துர்ச் சுபாவம் போகப்பண்ணும்;அன்பில் நான் வேரூன்றவேஅன்பின் ஸ்வாலை எழுப்பும்,மென்மேலும் வளர்த்திடும்.
4
வல்ல ஆவி, என்னில் தங்கும்,நானும் வல்லோன் ஆகவே!சாத்தான் என்னைத் தூண்டிவிடும்போது ஜெயங்கொள்ளவேநீர் என் பக்கத்தில் இரும்,என்னைப் பலப்படுத்தும்.
5
நல்ல ஆவி, என்னில் தங்கும்,நானும் நல்லோன் ஆகவே;பகை, மேட்டிமை, விரோதம்,மற்றும் தீமை யாவுமேஎன்னை விட்டகற்றுமேன்என்னைச் சீர்ப்படுத்துமேன்.
6
தெய்வ ஆவி, என்னில் தங்கும்நானும் உம்மில் தங்கவே,மோட்ச பாதையில் நடத்தும்இயேசுவின் முகத்தையேதெளிவாகக் காண்பியும்என்னை முற்றும் ரட்சியும்.
276A சுத்த ஆவி என்னில் · Requiem, Gounod — Tamil Pamalai