பாமாலை · Hymn284
வா பாவி இளைப்பாற
I heard the voice of Jesus say
1
”வா பாவி, இளைப்பாற வா,என் திவ்விய மார்பிலேநீ சாய்ந்து சுகி,” என்பதாய்நல் மீட்பர் கூறவே;இளைத்துப்போன நீசனாய்வந்தாறித் தேறினேன்;என் பாரம் நீங்கி, இயேசுவால்சந்தோஷமாயினேன்.
2
”வா, பாவி, தாகந்தீர வா,தாராளமாகவேநான் ஜீவ தண்ணீர் தருவேன்,”என்றார் என் நாதரே;அவ்வாறு ஜீவ ஊற்றிலேநான் பானம்பண்ணினேன்;என் தாகம் தீர்ந்து பலமும்பேர் வாழ்வும் அடைந்தேன்.
3
”வா, பாவி, இருள் நீங்க வா;நான் லோக ஜோதியே,உன் நெஞ்சில் ஒளி வீசுவேன்,”என்றார் என் நேசரே;மெய்ஞான அருணோதயம்அவ்வாறு நான் கண்டேன்அஜ்ஜோதியில் சந்தோஷமாய்நான் என்றும் ஜீவிப்பேன்.