பாமாலை · Hymn289

தாழ்விலிருந்து கூப்பிடும்

Aus Tiefer Not

Projector

Lyrics

1
தாழ்விலிருந்து கூப்பிடும்என் சத்தம் கேட்டன்பாகஅழுகை ஓலம் யாவுக்கும்செவி கொடுப்பீராக;கர்த்தாவே, பாவக் குற்றத்தைநீர் மன்னியாமல் நீதியைபார்த்தால் ஆர் நிற்கக் கூடும்?
2
மன்னிப்பை எவனாகிலும்தன் புண்ணியங்களாலேஅடையான்; உம்மை யாவரும்தாழ்வான் மனதாலேபணிந்து பயப்படவேமனத் தரித்திரருக்கேமன்னிக்கிறீர் கர்த்தாவே
3
நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன்என் புண்ணியம் அபத்தம்;தெய்வன்பையே நான் நம்புவேன்,அதற்கு வாக்குத்தத்தம்மெய்யான வேத வார்த்தையில்உண்டாமே நான் என் மனதில்அதற்குக் காத்திருப்பேன்
289 தாழ்விலிருந்து கூப்பிடும் — Tamil Pamalai