பாமாலை · Hymn290

நாங்கள் பாவப் பாரத்தால்

Saviour when in dust to Thee

Projector

Lyrics

1
நாங்கள் பாவப் பாரத்தால்கஸ்தியுற்றுச் சோருங்கால்தாழ்மையாக உம்மையேநோக்கி, கண்ணீருடனேஊக்கத்தோடு வாஞ்சையாய்கெஞ்சும்போது, தயவாய்சிந்தை வைத்து, இயேசுவேஎங்கள் வேண்டல் கேளுமே.
2
மோட்சத்தை நீர் விட்டதும்,மாந்தனாய்ப் பிறந்ததும்ஏழையாய் வளர்ந்ததும்,உற்ற பசி தாகமும்,சாத்தான் வன்மை வென்றதும்லோகம் மீட்ட நேசமும்சிந்தை வைத்து, இயேசுவே,எங்கள் வேண்டல் கேளுமே.
3
லாசருவின் கல்லறைஅண்டை பட்ட துக்கத்தைசீயோன் அழிவுக்காய் நீர்விட்ட சஞ்சலக் கண்ணீர்யூதாஸ் துரோகி எனவும்துக்கத்தோடுரைத்ததும்சிந்தை வைத்து, இயேசுவேஎங்கள் வேண்டல் கேளுமே.
4
காவில் பட்ட கஸ்தியும்ரத்த சோரி வேர்வையும்முள்ளின் கிரீடம், நிந்தனைஆணி, ஈட்டி, வேதனை,மெய்யில் ஐந்து காயமும்,சாவின் நோவும், வாதையும்சிந்தை வைத்து, இயேசுவேஎங்கள் வேண்டல் கேளுமே.
5
பிரேத சேமம், கல்லறை,காத்த காவல், முத்திரைசாவை வென்ற சத்துவம்பரமேறும் அற்புதம்,நம்பினோர்க்கு ரட்சிப்பைஈயும் அன்பின் வல்லமைசிந்தை வைத்து, இயேசுவே,எங்கள் வேண்டல் கேளுமே.
290A நாங்கள் பாவப் பாரத்தால் · Spanish Chant — Tamil Pamalai