பாமாலை · Hymn337
உம்மை ராஜா விசுவாச
King og Glory lowly bending
Christian Lifeகிறிஸ்தவ வாழ்க்கைMeter8.7.8.7.8.7TuneMannheimFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
உம்மை ராஜா விசுவாசபக்தியாய்ப் பணிகிறேன்தாழ்மையோடும் கண்ணீரோடும்தேவரீரை அண்டினேன்நீர் மண்ணான பாண்டமானஎன்னை அன்பாய்ப் பாருமேன்.
2
என்னைச் சுத்த சீர்ப்படுத்தஅருள் செய்யும், கர்த்தரே;என்னைச் சொந்த ஆடாய்க் கொண்டமேய்ப்பரான உம்மையேசேர்வேனாக, நீர் அன்பாகஎன்னைப் பாரும், இயேசுவே.
3
தயவோடே நீர் உம்மோடேஐக்கியமாம் எல்லாருக்கும்ஈவதான இன்பமானஅருள் என்மேல் வரவும்;யாவும் நீரே, தேவரீரேஎன்னைப் பார்த்து ரட்சியும்.
4
ஆ, என் ஞானப் பொழுதானதெய்வ ஆட்டுக்குட்டியேஎனதாவி உம்மைத் தாவிதேடும், மணவாளனே;பட்சத்தோடும் தயவோடும்என்னைப் பாரும், மீட்பரே.
5
ஏங்கலோடும் பணிவோடும்என்னுடைய ஆத்துமம்,வாயும் நெஞ்சும் கூவிக் கெஞ்சும்சத்தம் கேட்டென் சஞ்சலம்தீர்ப்பீராக; நீர் அன்பாகஎன்னைப் பார்த்தால் பாக்கியம்.
6
உலகத்துப் பொய்ச் சம்பத்துமாயையும் சிங்காரமும்ஆன நல்ல செல்வம் அல்ல,நெஞ்சை அவை வாதிக்கும்;மெய் வாழ்வான நீர் அன்பானபார்வை தந்து ரட்சியும்.
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake