பாமாலை · Hymn365

லௌகீக இன்பம்

Ach sagt mir nichts von gold

Projector

Lyrics

1
லௌகீக இன்பம் மேன்மையும்இப்பரதேசிக்கு வேண்டாம்;பரம நன்மை செல்வமும்இங்கில்லை, யாவும் மாயையாம்!பொருளல்லாததை நாடேன்;நான் இயேசுவை சிநேகிப்பேன்.
2
லௌகீக வாழ்வு ஒழியும்;சரீரம் அழகற்றுப்போம்;நரர் கைவேலை அழியும்;இவ்வுலகமும் வெந்துபோம்;பொருளல்லாததை நாடேன்;நான் இயேசுவை சிநேகிப்பேன்.
3
ஆனாலும் இயேசு ராஜியம்அழிந்து போகமாட்டாதே;மா நீதியாம் சிங்காசனம்விழாமல் என்றும் நிற்குமே;பொருளல்லாததை நாடேன்;நான் இயேசுவை சிநேகிப்பேன்.
4
நான் இங்கே தங்கும் நாள் எல்லாம்என் துன்பம் நீங்கமாட்டாதே;பரத்தில் சேர்ந்தபின் உண்டாம்மெய்வாழ்வு மேன்மை பூரிப்பேபொருளல்லாததை நாடேன்;நான் இயேசுவை சிநேகிப்பேன்.
365A லௌகீக இன்பம் · Ascendit Deus — Tamil Pamalai