பாமாலை · Hymn47
உலகின் வாஞ்சையான
O Lord how shall I meet Thee
1
உலகின் வாஞ்சையானஎன் ஸ்வாமி இயேசுவே,நான் உம்மை ஏற்றதானவணக்கத்துடனேசந்திக்கச் செய்வதென்ன?நான் தேவரீருக்குசெலுத்த உமக்கென்னபிரியமானது?
2
நான் நன்மையான ஏதும்இல்லாத தீயோனாய்நிர்ப்பந்தம், பயம், நோவும்நிறைந்தவனுமாய்இருந்தபோதன்பாகநீர் என்னை நோக்கினீர்;உம்மை என் மீட்புக்காகவெளிப்படுத்தினீர்.
3
கட்டுண்டு நான் கிடந்தேன்,என் கட்டை அவிழ்த்தீர்;மா சாபத்தைச் சுமந்தேன்,நீர் அதை நீக்கினீர்;நீர் என்னை மேன்மையாக்கிஎன் ஆத்துமத்திலேஇன்ப நிறைவுண்டாக்கி,ரட்சிக்க வந்தீரே.
4
நெஞ்சே துன்மார்க்கருக்கும்பகைஞர் உனக்குஉண்டாக்கும் துன்பத்துக்கும்பயப்படாதிரு;உன் மீட்பர் ராஜாவாகவருகிறாரல்லோ,அவருக்கு முன்பாகபேய்க் கூட்டம் நிற்குமோ?
5
பொல்லாதவர்களுக்குஅநந்த துக்கமும்,நல்லோரின் கூட்டத்துக்குஅநந்த பூரிப்பும்முடிவிலே உண்டாகஅந்நாள் வருவாரே;ஆம், எங்கள் மீட்புக்காகநீர் வாரும், இயேசுவே.