பாமாலை · Hymn84

ஆ மேசியாவே வாரும்

Hail to the Lord's Anointed

Projector

Lyrics

1
ஆ மேசியாவே வாரும்தாவீதின் மா மைந்தா!பார் ஆள ஏற்ற காலம்நீர் வந்தீர் மா கர்த்தா;சிறைகளையே மீட்டுகொடுங்கோல் முறிப்பீர்.சிறப்பாய் நீதி செய்துபாவமும் போக்குவீர்.
2
நிஷ்டூரம் யாவும் நீக்கிசகாயம் நல்குவீர்;கஷ்டத்தில் ஏழை தேற்றிநல் பலம் ஈகுவீர்;மாய்வோர் திரளை மீட்டுகளிப்பால் நிரப்பி,உய்விப்பீர் ஒளி ஈந்துஇருளை அகற்றி.
3
நல் மாரிபோல் நீர் வாரும்இப்பூமி செழிக்கநம்பிக்கை மகிழ்வன்பும்எங்கெங்கும் மலரநாதர் முன்தூதனாகநற் சமாதானமும்நீதியும் நதியாகஎங்கெங்கும் பாய்ந்திடும்.
4
விழுவார் தாழ்ந்து வேந்தர்பொன் போளம் படைத்தேதொழுவாரே, பார் மாந்தர்துதித்துப் பாடியே,ஓயா மன்றாட்டு ஸ்தோத்ரம்சமுகம் ஏறிடும்;ஒழியாதோங்கும் ராஜ்யம்என்றும் நிலைத்திடும்.
5
மாற்றார் எல்லாரும் மாயமாண்பாக ஆளுவீர்பேற்றின்மேல் பேறுண்டாகஆண்டாண்டும் ஆளுவீர்;நிற்கும் ஓயாத காலம்உமது ஆணையே,அன்பாம் உமது நாமம்ஆம், சதாகாலமே.
84C ஆ மேசியாவே வாரும் · Woodbird — Tamil Pamalai