பாமாலை · Hymn93
சிலுவைக் கொடி முன்செல்ல
The royal banners forward go
1
சிலுவைக் கொடி முன்செல்லசெல்வார் நம் வேந்தர் போர் செய்ய;நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;தம் சாவால் ஜீவன் தந்தனர்.
2
மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்,நல் வாலிபத்தில் மரித்தார்;நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே,நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.
3
முன்னுரை நிறைவேறிற்றே;மன்னர்தம் கொடி ஏற்றுமே;பலக்கும் அன்பின் வல்லமைசிலுவை வேந்தர் ஆளுகை.
4
வென்றிடும் அன்பின் மரமே!வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!உன் நிந்தை மாட்சி ஆயிற்றே,மன்னர் உம்மீது ஆண்டாரே.
5
உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்மன்னுயிர் சாபம் போக்கினர்;ஒப்பற்ற செல்வம் தம்மையேஒப்பித்து மீட்டார் எம்மையே.