பாமாலை · Hymn184
ஆ இயேசுவே
O Jesu meine Wonne
1
ஆ இயேசுவே உம்மாலேநான் மீட்கப்பட்டவன்உம் திவ்விய ரத்தத்தாலேநான் சுத்தமானவன்மிகுந்த கஸ்தியாலேஎன் தோஷத்தைத் தீர்த்தீர்உமது சாவினாலேநீர் என்னை ரட்சித்தீர்.
2
நான் உம்மால் என்றும் வாழ,இப்பந்தியில் நீரேஎன் ஆவிக்கேற்றதானஅமிர்தம் தந்தீரேஉம் ஆசீர்வாதம் ஈந்துஎன் பாவம் மன்னியும்அன்போடு என்னைச் சேர்த்துதயாளம் காண்பியும்.
3
நீர் இன்னும் என்னில் காணும்பொல்லாங்கு யாவையும்அகற்றிப்போட வாரும்என் நெஞ்சில் தங்கிடும்நான் உம்மைப் பற்றிக்கொள்ளகருணை புரியும்;மிகுந்த தாழ்மையுள்ளசித்தம் கடாக்ஷியும்.
4
நல் மீட்பரே, உம்மோடுநான் ஐக்கியமாகவும்நாடோறும் வாஞ்சையோடுஉம்மில் நிலைக்கவும்மிகுந்த அன்பினாலேதுணை செய்தருளும்தெய்வீக அப்பத்தாலேநீர் என்னைப் போஷியும்.