பாமாலை · Hymn242
நான் தூதனாக வேண்டும்
Home sweet home
1
நான் தூதனாக வேண்டும்விண் தூதரோடேயும்பொற் கிரீடம் தலை மேலும்நல் வீணை கையிலும்நான் வைத்துப் பேரானந்தம்அடைந்து வாழுவேன்;என் மீட்பரின் சமுகம்நான் கண்டு களிப்பேன்.
2
அப்போது சோர்வதில்லைகண்ணீரும் சொரியேன்நோய், துக்கம், பாவம், தொல்லைபயமும் அறியேன்மாசற்ற சுத்தத்தோடும்விண் வீட்டில் தங்குவேன்துதிக்கும் தூதரோடும்நான் என்றும் பாடுவேன்.
3
பிரகாசமுள்ள தூதர்நான் சாகும் நேரத்தில்என்னைச் சுமந்து போவார்என் இயேசுவண்டையில்நான் பாவியாயிருந்தும்என் மீட்பர் மன்னித்தார்எண்ணில்லாச் சிறியோரும்என்னோடு வாழுவார்.
4
மேலான தூதரோடும்நான் தூதன் ஆகுவேன்பொற் கிரீடம் தலைமேலும்தரித்து வாழுவேன்என் மீட்பர்முன் ஆனந்தம்நான் பெற்று வாழ்வதேவாக்குக் கெட்டாத இன்பம்அநந்த பாக்கியமே.