பாமாலை · Hymn262

என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்

The King of Love my Shepherd is

Projector

Lyrics

1
என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,நான் தாழ்ச்சியடையேனே;ஆட்கொண்டோர் சொந்தமான நான்குறையடைகிலேனே.
2
ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்நல் மேய்ச்சல் எனக்கீவார்.
3
நான் பாதை விட்டு ஓடுங்கால்அன்பாகத் தேடிப் பார்ப்பார்;தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்மகா சந்தோஷங்கொள்வார்.
4
சா நிழல் பள்ளத்தாக்கிலேநான் போக நேரிட்டாலும்,உன் அன்பின் கோலைப் பற்றவே,அதே என் வழி காட்டும்.
5
இவ்வேழைக்கும் ஓர் பந்தியைபகைஞர்க்கெதிர் வைத்தீர்;உம்மாவியால் என் சிரசைதைலாபிஷேகம் செய்வீர்.
6
என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்நிரம்பி வழிந்தோடும்;ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்நிறைந்து பொங்கிப் பாயும்.
7
என் ஜீவ காலம் முற்றிலும்கடாட்சம் பெற்று வாழ்வேன்;கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்நான் தங்கிப் பூரிப்பாவேன்.
262A என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான் · St. Columba — Tamil Pamalai