பாமாலை · Hymn305

தீயோர் சொல்வதை

Not Available

Projector

Lyrics

1
தீயோர் சொல்வதைக் கேளாமல்பாவத்துக்கு விலகி,பரிகாசரைச் சேராமல்நல்லோரோடு பழகி,கர்த்தர் தந்த வேதம் நம்பிவாஞ்சை வைத்து, அதைத்தான்ராப் பகலும் ஓதும் ஞானிஎன்றும் வாழும் பாக்கியவான்.
2
நதி ஓரத்தில் வாடாமல்நடப்பட்டு வளர்ந்து,கனி தந்து, உதிராமல்இலை என்றும் பசந்து,காற்றைத் தாங்கும் மரம்போலஅசைவின்றியே நிற்பான்;அவன் செய்கை யாவும் வாய்க்கஆசீர்வாதம் பெறுவான்.
3
தீயோர், பதர்போல் நில்லாமல்தீர்ப்பு நாளில் விழுவார்;நீதிமான்களோடிராமல்நாணி நைந்து அழிவார்;இங்கே பாவி மகிழ்ந்தாலும்பாவ பலன் நாசந்தான்;நீதிமான் இங்கழுதாலும்கர்த்தர் வீட்டில் வாழுவான்
305A தீயோர் சொல்வதை · Hymn to Joy — Tamil Pamalai