பாமாலை · Hymn314

வாழ்க, சிலுவையே; வாழ்க!

Gluck zu Kreuz von ganzem Herzen

Projector

Lyrics

1
வாழ்க, சிலுவையே; வாழ்க!பாரமற்ற பாரமேஉன்னை முழுமனதாரதோள் மேல் ஏற்றிக் கொள்வேனே.
2
இந்த நிந்தை லச்சை அல்ல,இது வெட்கம் அல்லவே;ஏனெனில் பொல்லாப்புக்கல்லநன்மைக்காக வருதே.
3
உலகத்தின் ஜோதியானஇயேசு தாமும் நிந்தைக்கேஏதுவாகி, ஈனமானசிலுவையில் மாண்டாரே.
4
சிலுவை சுமந்தோராகஅவரைப் பின்பற்றுவோம்;தீரங்கொண்டு வீரராகதுன்பம் நிந்தை சகிப்போம்.
5
நேசர் தயவாய் நம்மோடுசொல்லும் ஒரு வார்த்தையே,துக்கத்தை எல்லாம் கட்டோடுநீங்கிப் போகச் செய்யுமே.
6
சாகும்போது, திறவுண்டவானத்தையும், அதிலேமகிமையினால் சூழுண்டஇயேசுவையும் காண்போமே.
7
வாழ்க, சிலுவையே! வாழ்க;மோட்சத்தின் முன் தூதனே;நீதிமான்கள் இளைப்பாறநேர் வழியாம் வாசலே!
314 வாழ்க, சிலுவையே; வாழ்க! — Tamil Pamalai