பாமாலை · Hymn409

தந்தை சுதன் ஆவியே

God the Father God the Son

Projector

Lyrics

1
தந்தை, சுதர், ஆவியே,ஸ்வாமியாம் திரியேகரே,வானாசன மீதுற்றே,எங்களுக்கு இரங்கும்.
2
நிந்தை, கஸ்தி, தேவரீர்எங்கள் பொருட்டடைந்தீர்;தாசர் வேண்டுதலை நீர்கேளும் தூய இயேசுவே.
3
சீஷர் மூவர் தூங்கவே,கெத்சமனே காவிலே,உற்ற வேதனையாலே,கேளும் தூய இயேசுவே.
4
தந்தை சித்தம் ஆகவும்வந்த பாத்திரம் நீங்கவும்நீர் ஜெபித்ததாலேயும்கேளும் தூய இயேசுவே.
5
யூதாஸ் முத்தம் செய்யவேயூதர் உம்மைக் கட்டவேசிறைப்பட்டதாலுமேகேளும், தூய இயேசுவே.
6
வாரம் பட்ட காயமும்போர்த்த சிவப்பங்கியும்,முள்ளின் கிரீட மூலமும்கேளும், தூய இயேசுவே.
7
ராஜன் உம்மைத் தள்ளியேகள்ளன் பரபாசையேகேட்டுக் கொண்டதாலுமேகேளும், தூய இயேசுவே
8
"சிலுவையில் அறையும்"என்று யூதர் கூவவும்சாகச் சென்றதாலேயும்கேளும், தூய இயேசுவே.
9
நீர் சுமந்த குரூசாலே,நீர் குடிக்கும்படிக்கேதந்த காடியாலுமேகேளும், தூய இயேசுவே
10
கால் கரத்தில் ஆணியும்காட்டும் மேல் விலாசமும்காரிருள் நிமித்தமும்கேளும், தூய இயேசுவே
11
ஆடை சீட்டுப் போட்டதால்சாவின் வாதை பார்க்குங்கால்யூதர் செய்த நிந்தையால்கேளும், தூய இயேசுவே.
12
சொன்ன ஏழு வார்த்தையால்சோர்ந்து தலை சாய்த்ததால்உந்தன் பிரேதச் சேமத்தால்கேளும், தூய இயேசுவே
13
சோதனை நெருக்கத்தில்நாங்கள் தொய்ந்து போகையில்உந்தன் சாவின் வன்மையில்காரும் தூய இயேசுவே.
14
உம் சிலுவைப் பொருட்டே,யாவும் நஷ்டம் எனவேநாங்கள் எண்ணும்படிக்கேகாரும் தூய இயேசுவே.
15
நாங்கள் உம்மைப் பற்றியே,சாவின் நோவைக் கடந்தே,உம் சமுகம் சேரவே,காரும், தூய இயேசுவே
409 தந்தை சுதன் ஆவியே — Tamil Pamalai