பாமாலை · Hymn676

என்னை மீட்டுத் தாங்கிய

Jesus Christ my sure defence

Projector

Lyrics

1
என்னை மீட்டுத் தாங்கியஇயேசு ஜீவனுள்ளோராமேஅவரை அறிகிற நான்மகிழ்ந்திருக்கலாமேஎன்னைச் சாவின் ராத்திரிஏன் கலக்கிடும் இனி
2
நம்பிக்கையின் கட்டினால்அவரோடே கட்டப்பட்டேன்விசுவாச பக்தியால்அவரை அணைக்கக் கற்றேன்சாவால் நானும் அவரும்வெவ்வேறாகோம், என்றைக்கும்
3
இங்கே நான் தவிக்கிறேன்அங்கே மகிமை தரிப்பேன்மண்ணில் மண்ணாய்த் தங்கினேன்விண்ணில் விண்ணோனாய்க் கெலிப்பேன்ஜென்ம உடலுள்ள நான்அங்கே ஆவியங்கத்தான்.
4
லோக ஆசை இச்சையைஇப்போதே மிதித்துப் போடுஆவியே நீ இயேசுவைச்சேர்ந்தென்றைக்கும் அவரோடுதங்க நாடும் வாழ்வுக்குப்போக ஆயத்தப்படு.
676 என்னை மீட்டுத் தாங்கிய — Tamil Pamalai